Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஅடுக்குமாடி குடியிருப்பில் 'தீ-'யில் கருகிய வாகனங்கள்; வழக்குப் பதிந்த காவல்துறை

    அடுக்குமாடி குடியிருப்பில் ‘தீ-‘யில் கருகிய வாகனங்கள்; வழக்குப் பதிந்த காவல்துறை

    புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

    புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 16-ஆவது குறுக்கு தெருவில் உள்ளது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த புத்தாண்டு இரவு அன்று அடுக்குமாடி குடியிருப்பு வாசி வாகன நிறுத்துமிடத்தில் இருந்து புகை கிளம்பியதை கண்டு அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசி ஒருவர், அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாகனங்களில் பற்றி எறிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதனால் அங்கு பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு செயலாளர் மணிகண்டன் 8 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நேற்று மாலை வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில், இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டு கொளுத்தி உள்ளார்களா அல்லது இருசக்கர வாகனத்தில் ஏதேனும் ஒயர்களில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பறவை காய்ச்சல் எதிரொலி; 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....