Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பறவை காய்ச்சல் எதிரொலி; 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு

    பறவை காய்ச்சல் எதிரொலி; 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு

    மேற்கு டென்மார்க் பகுதியில் கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதால், 50 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் பகுதிக்கு மேற்கு 177 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஹெடஸ்டெட் நகராட்சி. இங்குள்ள பண்ணை ஒன்றில் புத்தாண்டு நாளில் பறவை காய்ச்சலால் பல கோழிகள் இறந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 

    அதன்பின்பு, ஆய்வு செய்து பார்த்ததில் கோழிகளுக்கு அதிக தொற்று ஏற்படுத்தக்கூடிய எச்5என்1 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற கோழிகளுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக 50 ஆயிரம் கோழிகளை அழிக்க டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    பாதிக்கப்பட்ட அனைத்து கோழிகளும் அழிக்கப்பட்டு அகற்றப்பட இருப்பதாகவும், மேலும், அந்தப் பண்ணையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணையைச் சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவு தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    டென்மார்க்கில் அக்டோபர் 2022 ஆம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாக மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிவாயு சிலிண்டர்களாக மாறிய பலூன்கள்! பாகிஸ்தான் மக்களின் தற்போதைய நிலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....