Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கலுக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன?

    பொங்கலுக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன?

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழர்களின் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவரவர் சொன்னது ஊர்களுக்கு செல்வர். அனைவரும் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

    இதன்படி, பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 12 முதல் 14 தேதி வரை சென்னையில் இருந்து கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், மற்ற ஊர்களில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. 12,13,14 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    பறவை காய்ச்சல் எதிரொலி; 50 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....