Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்எரிவாயு சிலிண்டர்களாக மாறிய பலூன்கள்! பாகிஸ்தான் மக்களின் தற்போதைய நிலை

    எரிவாயு சிலிண்டர்களாக மாறிய பலூன்கள்! பாகிஸ்தான் மக்களின் தற்போதைய நிலை

    பாகிஸ்தானில் பொதுமக்கள் சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் எடுத்து செல்லும் காட்சி தற்போது வைரலாகி உள்ளது. 

    பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நெருக்கடியால் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் சேகரித்து எடுத்து செல்கின்றனர். 

    எரிவாயு விற்பனையாளர்கள் ஒரு கம்பரசரைப் பயன்படுத்தி சமையல் ஏரிவாயுவை பெரிய பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி அதன் வால்வை வைத்து மூடி, பிறகு பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். இப்படி வாங்கிச் செல்லும் மக்கள், அதை சிறிய மின்சாரம் உறிஞ்சும் பம்ப் மூலமாக சமையல் எரிவாயுவினை பயன்படுத்துகின்றனர். 

    அப்படி பிளாஸ்டிக் பைகளில் 3 முதல் 4 கிலோ எரிவாயுவினை நிரப்புவதற்கு சுமார் ஒரு மணி நேரம் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி பொதுமக்கள், எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் எடுத்து செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மூன்று மாத குழந்தையை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....