Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'அன்று முதல் இன்று வரை பயணித்தவர்கள்....' - மெட்ரோ வெளியிட்ட ரிப்போர்ட்..

    ‘அன்று முதல் இன்று வரை பயணித்தவர்கள்….’ – மெட்ரோ வெளியிட்ட ரிப்போர்ட்..

    கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 15 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 208 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மெட்ரோ ரயில்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

    மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 2 கோடியே 80 லட்சம் பேர், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

    அதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 3.28 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக மெட்ரோ சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் 1.18 கோடி பேர் அந்த ஆண்டில் பயணம் செய்தனர். 

    2021 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு 2.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு 6 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

    இந்நிலையில் மெட்ரோ ரயில்கள் தொடங்கிய கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 15 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 208 பேர் பயணம் செய்துள்ளனர். 

    ‘கலையில் ஜாதி, மதம் கிடையாது’ – கேரள முதல்வர் பேச்சு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....