Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'கலையில் ஜாதி, மதம் கிடையாது' - கேரள முதல்வர் பேச்சு..

    ‘கலையில் ஜாதி, மதம் கிடையாது’ – கேரள முதல்வர் பேச்சு..

    எவ்வித வேறுபாடுமின்றி அனைவரும் கலையை அனுபவிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

    கேரள பள்ளியின் 61-ஆவது கலை நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது ஆசியாவின் மிகப்பெரிய கலாசார நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். 

    இந்த நிகழ்ச்சயில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது; 

    இந்த விழா மேடையானது, ஜாதி, மத வேறுபாடின்றி மாநிலத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை, அனைவரையும் ஊக்குவிக்கும் மேடையாக அமைய வேண்டும்.

    கலை என்பது அனைத்து ஜாதி மதத்திற்கும் அப்பாற்பட்டது. எனவே, மாநிலத்தில் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் இத்திருவிழாவை அனைவரும் ரசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், கேரளம் தொடர்ந்து அமைதி, மகிழ்ச்சி மற்றும் மதச்சார்பின்மையின் மையமாக இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்நிகழ்ச்சியில் 14,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம், அனைவரும் வெற்றிபெற முடியாது, எனவே நிகழ்வில் பங்கேற்பதில் தான் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    அதிமுக பிளவுபட்டிருப்பது குழந்தைகளுக்கே தெரியும்- பாமக பாலு தாக்கு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....