Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்; பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்...

    ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்; பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்…

    புதுச்சேரி ரேஷன் கடையை மீண்டும் திறந்து பொங்கல் தொகுப்புகளை வழங்க வேண்டும், நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பயனாளிகளுக்கு நேரடி பண பரிமாற்ற முறையை ரத்து செய்ய மறுக்கும் துணைநிலை ஆளுநர் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    சமீபத்தில், புதுச்சேரியில் உள்ள நியாய விலைக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும், நிலுவையில் உள்ள மாத சம்பளத்தை வழங்க வேண்டும், பயனாளிகளுக்கு மத்திய அரசின் நேரடி பண பரிமாற்ற முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற அமைச்சரவை ஒப்புதல் பெற்று கோப்புகள் துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பப்பட்டது.

    ஆனால், அனுப்பப்பட்ட கோப்பில் தமிழிசை இதுவரை கையெழுத்து இடவில்லை. இதனால், துணைநிலை ஆளுநர் தமிழிசையை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சுதேசி மில் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பண்டிகை தொகுப்புகளை வழங்க அரசு முடிவெடுத்து ரேஷன் கடை மூலம் வழங்காமல் வேறு துறைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதை ரத்து செய்து ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும் என கோரியும், அமைச்சரவை கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கி ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ரத்த ஓவியத்திற்கு தடை; ‘பிளட் ஆர்ட்’ நிறுவனங்களை எச்சரிக்கும் அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....