Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆன்லைன் சூதாட்ட அவசரத் சட்டத்தின் அவசரத் தன்மையை ஆளுநர் உணர வலியுறுத்தும் பாமக நிறுவனர்

    ஆன்லைன் சூதாட்ட அவசரத் சட்டத்தின் அவசரத் தன்மையை ஆளுநர் உணர வலியுறுத்தும் பாமக நிறுவனர்

    கடந்த 16 மாதங்களில் 39 ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நடந்திருப்பதாகவும், சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

    இது தொடர்பாக இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    திண்டுக்கல் மாவட்டம், கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு  அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியான பிறகு, சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் தாமதம் செய்வது நியாயம் அல்ல.

    ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    ரத்த ஓவியத்திற்கு தடை; ‘பிளட் ஆர்ட்’ நிறுவனங்களை எச்சரிக்கும் அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....