Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்திடீரென 'எரர்' காட்டிய ட்விட்டர்! பயனர்கள் அவதி

    திடீரென ‘எரர்’ காட்டிய ட்விட்டர்! பயனர்கள் அவதி

    30 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் ட்விட்டர் செயலி இன்று காலை பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சமூக வலைதளங்களில் முன்னணி வலைதளமாக செயல்பட்டு வரும் ட்விட்டர் செயலியானது இன்று காலை பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ட்விட்டர் கணக்கில் உள் நுழையும்போது பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ததும் ஏரர் என்று வந்துள்ளது. இதனால் ட்விட்டர் பயனாளர்கள் சிரமத்தை சந்தித்ததாக தெரிவித்தனர். இதன் காரணமாக பதிவுகளை காணமுடியவில்லை என்றும் கூறினர். 

    இன்று காலை இந்த தொழில்நுட்பக் கோளாறு நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு சில மணி நேரம் கழித்து செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தொழில்நுட்பக் கோளாறுக்கு ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. 

    தற்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ளார். இந்நிலையில் நிர்வாக ரீதியிலும் தொழில்நுட்ப ரீதியிலும் எலான் மஸ்க் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனிடையே எலான் மஸ்க் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு இது மாதிரி மூன்றாவது முறையாக ட்விட்டர் முடங்கியதாக சொல்லப்படுகிறது. 

    ஆசிரியர்கள் போராட்டம்; 40-க்கும் மேற்பட்டோர் மயக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....