Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பொதுமக்களுக்கு அச்சம் தேவையில்லை என்றும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 15 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என்றும், 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும் கூறினார்.

    மேலும், அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என கூறிய அவர், முறைகேடுகளை கண்டுபிடிக்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுவரை 1 கோடியே 15 லட்சம் மின் இணைப்பு தாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் உள்ளதாக கூறிய அவர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் அமைக்கும் பணிகள் குறித்து வலியுறுத்தியுள்ளதாகவும், இன்று பிற்பகல் சரிசெய்யப்படும் எனவும் கூறினார்.

    பொதுமக்களுக்கு எந்த வித அச்சமும் தேவையில்லை எனவும், டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மின்சார வாரியத்தை மேம்படுத்தவே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும், கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்து 516 கோடி வட்டி கட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மின்கட்டணம் செலுத்த தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதாககூறிய அவர், அதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், 50 ஆயிரம் பேர் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஒரே ஆதாரை வைத்து 10 மின் கட்டண இணைப்பிலும் இணைக்கலாம்.

    100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்புக்கான மானியங்கள் தொடரும். ஒருவர் 5 மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். ஆதாரை இணைத்தால் மானியங்கள் ரத்தாகும் என்ற தகவலில் உண்மையில்லை என தெரிவித்தார்.

    அரசு மருத்துவமனைகள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்; மா சுப்பிரமணியன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....