Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு மருத்துவமனைகள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்; மா சுப்பிரமணியன்

    அரசு மருத்துவமனைகள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்; மா சுப்பிரமணியன்

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சை வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    இன்று, சென்னை, சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

    அப்போது அவர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். 

    மேலும் அரசு மருத்துவமனைகளின் மூலம் நாள்தோறும் 6 லட்சம் பேர் பயன் அடைவதாகவும், 70 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும், 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதாரத்துறைக்கும், கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டதாகவும், சுகாதார துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்ததாகவும் தெரிவித்தார். 

    மேலும் தமிழக அரசு அந்தக் கேள்விகளுக்கு பதில்களை அனுப்பி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தற்போது காத்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    ‘ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் அனுமதி தருவார்’; அமைச்சர் பொன்முடி நம்பிக்கை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....