Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் அனுமதி தருவார்'; அமைச்சர் பொன்முடி நம்பிக்கை..

    ‘ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் அனுமதி தருவார்’; அமைச்சர் பொன்முடி நம்பிக்கை..

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இதற சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஆளுநர் அனுமதி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    தமிழக உயர்கல்வித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் கல்லூரி மற்றும் ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், கட்டுமான பணிகள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித் துறையில் இடம் பெற்றுள்ள பொறியாளர்களுடன் இன்று ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

    அக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

    உயர்கல்வி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் தொடர்பாக பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொறியாளர்கள் செயற் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உயர்கல்வித்துறையில் 382 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது, அதில் புதிய கல்லூரிகள் கட்டுதல், கல்லூரியில் நூலகங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட 382 பணிகள் மேற்கொள்ள
    422.8 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தற்போது அந்த கட்டிடப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை மாநில கல்லூரியில் 63 கோடி ரூபாய் மதிப்பில், ஆடிட்டோரியம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் விடுதி கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் அதற்கான ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள் விடப்படும்.

    ராணி மேரி கல்லூரியில் Phd ஆய்வு மாணவர்களுக்கு விடுதிகள் கட்ட 42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகளும் தொடங்கும். 26 அரசு கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது, அதில் 16 கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்குள் திறக்கப்படும் என்றார். மீதமுள்ள 10 கல்லூரிகள் கட்ட விரைவில் இடம் தேர்வு செய்து கட்டிடம் கட்டப்படும்.

    ஆன்லைன் ரம்மிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா தொடர்பாக ஆளுநரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் நேரம் கேட்டார், ஆனால் அதற்கு கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.ஆனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மற்ற மசோதாவிற்க்கும்
    விரைந்து ஆளுநர் அனுமதி வழங்குவார் என நம்புகிறோம்.

    கல்லூரி பேராசிரியர்கள் கவுன்சிலிங் இடமாற்றம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுவரை 580 கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், கவுரவ விரிவுரையாளர்களுக்கும் இடமாற்ற கலந்தாய்வு நடைபெறும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

    புதுச்சேரி காவல்துறையில் அதிகாரிகள் உள்பட 148 போலீசார் அதிரடி இடமாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....