Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரஷ்யாவில் வெளியாகப் போகும் புஷ்பா...கொடி பறக்குமா?

    ரஷ்யாவில் வெளியாகப் போகும் புஷ்பா…கொடி பறக்குமா?

    புஷ்பா திரைப்படம் தற்போது ரஷ்யாவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம்தான், புஷ்பா. தெலுங்கில் உருவானாலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. 

    புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படத்திற்கு தெலுங்கு உலகின் ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்தார். 

    அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழு செய்த விளம்பரத்தால், புஷ்பா திரைப்படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் இந்தியா முழுவதும் ரீங்கரிக்கத் தொடங்கியது. பட்டித்தொட்டியெங்கும் புஷ்பா திரைப்படத்தைக் கொண்டு சேர்த்த பெருமை முதலில் இத்திரைப்படத்தின் பாடலுக்குத்தான். 

    ‘ஓ சொல்றியா மாமா’ மற்றும் ‘ஶ்ரீ வள்ளி’ பாடல்கள் பலரையும் புஷ்பா திரைப்படத்தைப் பற்றி பேச செய்தது. ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வெளியான சமயத்தில் ஏற்பட்ட பாடல் குறித்த சர்ச்சைகள் புஷ்பா திரைப்படத்துக்கு மிகச்சிறந்த புரோமஷனாகவே அமைந்தது. 

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான புஷ்பா திரைப்படமானது, வசூலில் பல சாதனைகளைப் படைத்தது. இந்தியா முழுவதும் பலரையும் கவர்ந்த இத்திரைப்படமானது 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. 

    புஷ்பா திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று முன்பே கூறப்பட்டது. அதன்படியே, புஷ்பா திரைப்படத்தின் முதல்பாகம் ‘புஷ்பா- தி ரைஸ்’ என்ற பெயரில் வெளிவந்தது. புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகதானது ‘புஷ்பா- தி ரூல்’ என்ற பெயரில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, தற்போது ‘புஷ்பா- தி ரூல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து பகுதியில் உள்ள பாங்காக் காட்டுப்பகுதியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகமான ‘புஷ்பா- தி ரைஸ்’ ரஷ்யாவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, டிசம்பர் 8-ஆம் தேதி இத்திரைப்படமானது ரஷ்யாவில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு படக்குழுவுடனான பிரிமியர் ஷோக்களும் ரஷ்யாவில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை! காரணம் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....