Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த மத போதகர்; காவல்துறையினரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு

    மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த மத போதகர்; காவல்துறையினரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு

    9 வயதுக்குட்பட்ட தனது மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக தீர்க்கதரிசி என தன்னை தானே சொல்லிக்கொண்ட கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

    அமெரிக்க நாடான அரிசோனாவைச் சேர்ந்தவர் சாமுவேல் ராப்பிலீ பேட்மேன். 46 வயது மதிக்கத்தக்கவரான பேட்மேன் தீவிர மோர்மன் அதாவது தன்னை ஒரு தீர்க்க தரிசியாக அறிவித்து, புனிதர்களின் ,இயேசு கிறிஸ்துவின் அடிப்படைவாத தேவாலயம் (FLDS) என அழைக்கப்படும் பலதார மணம் செய்யும் மோர்மன்களின் ஒரு சிறிய குழுவின் தலைவராகவும், போதகராகவும் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் ஒன்பது வயதிற்குட்பட்ட தனது சொந்த மகள் உள்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.பேட்மேன் திருமணம் செய்துகொண்ட 20 பெண்களில் ஒன்பதுக்கு மேற்பட்டவர்கள் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் என்று கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி அவர் தலைமையேற்று நடத்தி வந்த குழுவின் உறுப்பினர்களையும் தனது சிறு வயது மகள்களுடன் உடலுறவில் ஈடுபடும் படி பேட்மேன் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

    மேலும் பேட்மேன் மறையுரை நிகழ்த்தும் போது , சிறுமிகள் “இறைவனுக்காக தங்கள் நல்லொழுக்கத்தை தியாகம் செய்ததாக” கூறியுள்ளார் . மேலும்”கடவுள் அவர்களின் உடலை சரிசெய்து, அவர்களின் உடலில் மீண்டும் படலத்தை வைப்பார்.” “அவருடைய விருப்பத்தைச் செய்வதில் எனக்கு அதிக நம்பிக்கை இருந்ததில்லை. இது எல்லாம் அன்பினால் தான்,” என்று கூறினாராம் .

    குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக பேட்மேன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுத்தை அடுத்து கொலராடோ நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளில், எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதோடு , பேட்மேனை கைது செய்து அரிசோனா சிறையில் அடைத்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....