Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உள்ளூர் பானங்களை அருந்துங்கள்.. பொருளாதாரத்தினை உயர்த்த பாகிஸ்தான் முயற்சி..

    உள்ளூர் பானங்களை அருந்துங்கள்.. பொருளாதாரத்தினை உயர்த்த பாகிஸ்தான் முயற்சி..

    பாகிஸ்தானின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு புதுவிதமான உத்திகளைக் கண்டறியுமாறு அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பாகிஸ்தான் நாட்டின் உயர் கல்விக் குழுவின் இயக்குனர் டாக்டர் ஷைஸ்டா சோஹைல் அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில், உள்நாட்டு பானங்களான லஸ்ஸி மற்றும் சட்டு ஆகியவற்றின் உற்பத்தியினை அதிகரிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும், வருவாயினையும் பெருக்கமுடியும். இதன் மூலம் டீத்தூள் இறக்குமதிக்கு ஆகும் செலவினையும் குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவின் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் டீத்தூள் இறக்குமதிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 8.2 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

    இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர்களில் ஒருவரான அசன் இக்பால், நாட்டின் பொருளாதாரத்தினை மீட்பதற்காக பொதுமக்கள் குறைவாக டீ குடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சிற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்ற வருடத்தில் பாகிஸ்தான் டீத்தூள் இறக்குமதிக்காக செய்த செலவினை விட இந்த நிதியாண்டில் 60 மில்லியன் டாலர் அதிகமாக செலவு செய்துள்ளது. டீத்தூள் இறக்குமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழும் பாகிஸ்தான், தற்போது டீத்தூளினை இறக்குமதி செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இக்பால் தெரிவித்திருந்தார்.

    பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பெரிய தொழில் நிறுவனங்களான சிமெண்ட், இரும்பு, வாகன உற்பத்தி ஆகியவற்றிற்கு 10 சதவீத கூடுதல் வரியினை அறிவித்திருந்தார். மேலும், அதிக வருமானம் பெரும் தனி மனிதர்களுக்கும் ‘ஏழ்மையினை நீக்குவதற்கான வரி’ என்று ஒரு புதிய வரிவிதிப்பினை அறிவித்திருந்தார்.

    நாட்டின் பொருளாதாரத்தினை மீட்பதற்கு பல்வேறு வழிகளை பாகிஸ்தான் அரசு செய்து வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சர்வதேச கடன் வழங்கும் அமைப்பானது பாகிஸ்தான் நாட்டிற்கு சுமார் ஆறு பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடனானது அந்நாட்டின் பொருளாதாரத்தினை மீட்பதற்கு பெரிதும் உதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேபாளத்தின் தலைநகரில் பானி பூரி விற்பதற்கு தடை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....