Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமகாளய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

    மகாளய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

    மகாளய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினங்களின் இறுதியில் வருகிறது மகாளய அமாவாசை. 

    பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.

    இந்நிலையில், மகாளய பட்சத்தின் இறுதி நாள் அம்மாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர். 

    மகாளய தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மகாளய நாளில், அனைவரும் துர்கை அம்மனை வேண்டிக்கொள்வோம். அம்மனுடைய தெய்வீக ஆசீர்வாதத்தை நம் மக்களுக்காகப் பெறுவோம். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். சுற்றிலும் வளமும் நல்லிணக்கமும் நிலவட்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....