Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!

    ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

    ஐக்கிய நாடுகளின் 77-வது பொதுச் சபையில்  ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உரையாற்றினார். அந்த உரையில் அவர் பேசியதாவது:

    ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தின் மூலம் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயகமாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். அவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக ஆக்கப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சுகளால் தமிழகத்தில் பதற்றம்; அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

    மேலும், உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்படும் வாக்கெடுப்பு குறித்து மேற்கத்திய நாடுகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்ற, பொறுப்பற்ற செயல். 

    நேர்மையான முறையில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் சமரச முயற்சியையும் மேற்கொள்வதற்கு பதிலாக, மேற்கு நாடுகள் “சர்வதேச அமைப்பின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து” எதிர்மறையான போக்குகளை ஊக்குவிக்கின்றன.

    என்று தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....