Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பெட்ரோல் குண்டு வீச்சுகளால் தமிழகத்தில் பதற்றம்; அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

    பெட்ரோல் குண்டு வீச்சுகளால் தமிழகத்தில் பதற்றம்; அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்டம்பர் 26) மாலை டெல்லி செல்லவிருக்கிறார். 

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். 

    டெல்லி செல்லும் அவர், நாளை (செப்டம்பர் 27) உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் நடந்த சம்பவங்கள்  தொடர்பாக ஆலோசனை செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இதுமட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, இந்தப் பெட்ரோல் வெடிகுண்டு சம்பவங்கள் குறித்து பேசுவார் எனவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருத்தம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....