Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்

    மெக்சிகோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    மெக்சிகோவின் தென்மேற்கு கடற்கரையில் நேற்று 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ நகரில் உள்ள சில கட்டடங்கள் குலங்கின. அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு நிறுவனம் செய்தியாளர் கூட்டத்தில் 7.7 ரிக்டர் அளவில் என்று கூறியுள்ளது.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது அக்விலா நகருக்கு தென் கிழக்கே சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 15.1 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

    முன்னதாக, மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....