Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர் பள்ளி மாணவியின் உடல் நல்லடக்கம்

    திருவள்ளூர் பள்ளி மாணவியின் உடல் நல்லடக்கம்

    திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள விடுதியில் மர்மமான முறையில் இறந்த பள்ளி மாணவி சரளாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழ்ச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணியைச் சேர்ந்த சரளா என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்நிலையில், ஜூலை 25-ம் தேதி அவர் பள்ளி விடுதியில் உள்ள ஒரு அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவி சரளாவின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். 

    மேலும், மாணவி சரளாவின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    இதைத்தொடர்ந்து, மாணவி உயிரிழந்தது குறித்து சரியான முறையில் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை என நேற்று முன்தினம் (ஜூலை 25 ) மாணவி சரளாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாணவியின் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 

    இந்நிலையில் நேற்று (ஜூலை 26) காலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சரளாவின் உடற்கூராய்வு நடைபெற்றது. அப்போது மாணவி சரளாவின் அண்ணன் சரவணன் உடனிருந்தார். 

    இதைத்தொடர்ந்து உடற்கூராய்வு முடிந்த நிலையில், மாணவி சரளாவின் உடலை வாங்க அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்தனர்.மாணவி உயிரிழந்தற்கான காரணம் தெரிந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இவர்களின் பேச்சுவார்த்தை பலனிலக்கவே, மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர்கள் சம்மதித்தனர். நேற்று (ஜூலை 26) பிற்பகல் மாணவியின் உடல் பலத்த பாதுகாப்புடன் அவரின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பின்பு பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....