Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகைக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!

    பொங்கல் பண்டிகைக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!

    பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 13 ஆம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பொங்கல் பண்டிகை வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருப்பர். 

    தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பில் இருந்தே முன்பதிவு செய்யக்கூடிய வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. 

    இதன்படி ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு ஆரம்பம் ஆன நிலையில், இன்று ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பாகவும் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதனிடையே, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    பெரும் காத்திருப்புக்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ டிரெய்லர்… குஷியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....