Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பெரும் காத்திருப்புக்குப் பிறகு வெளியான 'ஸ்பைடர்மேன்' டிரெய்லர்... குஷியில் ரசிகர்கள்!

    பெரும் காத்திருப்புக்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ டிரெய்லர்… குஷியில் ரசிகர்கள்!

    ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மட்டுமன்றி பலராலும் எதிர்பார்க்கப்படும், ‘ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியாகியுள்ளது.

    ஸ்பைடர்மேன் – இந்த ஒற்றை வார்த்தைக்கே உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக நம் இந்தியாவில் ஸ்பைடர்மேன் திரைபடத்திற்க்கான ரசிகர்கள் ஏராளம். இந்தியாவில் இதுவரை வெளிவந்த அத்துனை ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் 90-ஸ் கிட்ஸ், ஸ்பைடர்மேன் திரைப்படத்திற்கு தீவிர ரசிகர்களாக இருந்தனர், இருந்தும் வருகின்றனர்.

    ஸ்பைடர்மேன் திரைப்படத்திற்கு இந்த 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் எல்லாம் கிடையாது. அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கக்கூடிய திரைப்படமாகத்தான் ஸ்பைடர்மேன் இதுவரை இருந்து வருகிறது. சிறிய வயதில் சிலந்தி கடித்தால் நாமும் ஸ்பைடர்மேன் ஆகிவிடலாம் என எண்ணாத நபரகள் மிக குறைவு. அப்படி எண்ணியதை இப்போது திரும்பி பார்க்கையில் ஒரு புன்னகை நமக்கு தோன்றினால் அதுதான் நமக்கும் ஸ்பைடர்மேன் திரைப்படத்திற்குமான உறவு!

    ஸ்பைடர்மேன் சமந்தமான கார்டூன்கள், காமிக் புத்தகங்கள், கேம்கள் என அனைத்தையும் ரசிக்கும் ரசிகர்கள் இங்கே இருக்கின்றனர். இதுவரை வெளிவந்த ஸ்பைடர்மேன், அமேசிங் ஸ்பைடர்மேன், இதன் பிறகான ஸ்பைடர்மேன் என அனைத்திற்கும் இப்போதும் ரசிகர்கள் உள்ளனர். அவெஞ்சர் களில் நமக்கு பல சூப்பர் ஹீரோக்களை தெரியலாம். ஆனால் அதற்கெல்லாம் நம்மிடத்தில் அடித்தளம் போட்டது ஸ்பைடர்மேன்தான்.

    இப்படியான ஸ்பைடர்மேனின் அனிமேஷன் திரைப்படமாக 2018-ஆம் ஆண்டு வெளிவந்ததுதான், ஸ்பைடர்மேன் இன் டூ தி வெர்ஸ் (spiderman into the verse). இப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாகமான ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் ( Spider-Man Across The Spider-Verse) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ளது. 

    ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மட்டுமன்றி பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்த ‘ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இப்படமானது, வருகிற ஜூன் மாதம் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....