Saturday, March 23, 2024
மேலும்
    Homeவானிலைவங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!

    வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!

    தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    மேலும் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுபகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே, வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், அது இலங்கையை ஒட்டி தமிழக மாவட்டங்களிடையே கரையைக் கடக்கும் என்றும், கரை கடந்த பின்பு, உள் மாவட்டங்கள் வழியாக அரபிக்கடலுக்கு செல்லும் என்றும், அந்த சமயத்தில் உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் வானிலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பெரும் காத்திருப்புக்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ டிரெய்லர்… குஷியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....