Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதாயாரின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு தன் பணிக்கு திரும்பிய மோடி...

    தாயாரின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு தன் பணிக்கு திரும்பிய மோடி…

    மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொளி காட்சியின் வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தாயார் காலமானதால் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி இன்று காலை காந்தி நகரில் இருக்கும் இல்லத்தில் தாயின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு தாயின் உடலை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்தார். 

    இதனிடையே திட்டமிட்டபடி இன்றைய அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி காணொளி காட்சியின் வாயிலாக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார். 

    பீலேவின் மறைவு; மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்த பிரேஸில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....