Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பீலேவின் மறைவு; மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்த பிரேஸில்..

    பீலேவின் மறைவு; மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்த பிரேஸில்..

    கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரம் பீலேவின் மறைவையொட்டி, அந்நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    கால்பந்து உலகில் மாபெரும் நட்சத்திரமாக விளங்கி வந்தவர், பீலே. புற்றுநோய், பெருங்குடல் அறுவை சிகிச்சை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    இந்நிலையில், பீலே சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 82. இதைத்தொடர்ந்து, பிரேஸில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்பந்து விளையாட்டு வீரர் பிலேவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.   

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்காக மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்று தந்துள்ள பீலே, மொத்தமாக 700 ஆட்டங்களில் 655 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். மேலும், கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு பிரேஸில் விளையாட்டுத் துறை அமைச்சராக 1995-1998 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். 

    தற்போது பீலேவின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில், 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....