Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபெண்கள் பாதுகாப்பு குறித்த மணற்சிற்பம்; பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

    பெண்கள் பாதுகாப்பு குறித்த மணற்சிற்பம்; பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

    மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்பு குறித்த மணல் சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

    தமிழ்நாடு அரசின் “181 மகளிர் உதவி மையம்” என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம்.  

    இதன்மூலம் குடும்ப பிரச்சனை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

    181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம். 

    பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை  முதலமைச்சர்   பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த “பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி” விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார். 

    அந்தப் பதாகையில், “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்!பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்!” என்ற உறுதிமொழி இடம்பெற்றிருந்தது. 

    தாயாரின் இறுதிச்சடங்கை முடித்த கையோடு தன் பணிக்கு திரும்பிய மோடி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....