Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அவதார் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

    அவதார் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

    அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 10, 200 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இது ரசிகர்களுக்கு புது வித அனுபவமாக இருந்தது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வெளிவந்தது. உலகம் முழுவதும் 52,000-த்திற்கும் அதிகமான திரைகளில், 160-க்கும் அதிகமான மொழிகளில் அவதார் திரையிடப்பட்டது. 

    இதனால், அவதார்-2 மாபெரும் வசூல் சாதனையை புரியும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவதார் திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இன்றைய நாள் வரை அவதார் திரைப்படம் 10,200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில், 15,000 கோடி என்ற மைல்கல்லை அவதார் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....