Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    ஒரு திரைப்படம் நமக்கு மற்றொரு உலகத்தை கண் முன்னே காட்டும் வல்லமை படைத்தது. திரைப்படங்களில் துளியும் நமக்கு சம்மந்தமில்லாத உலகத்தையும் காணலாம், நம் சம்மந்தப்பட்ட உலகத்தையும் காணலாம். அப்படியாகத்தான் கடந்த 2009-ம் ஆண்டு புவிவாசிகள் ஒரு திரைப்படத்தை கண்டு, நமக்கு துளியும் சமந்தமில்லாத ஒரு உலகுக்குள் திரைப்படத்தின் வாயிலாக நுழைந்தனர். 

    அந்தப் படம் உலகம் முழுவதும் நிகழ்த்திய மாயாஜாலங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. இப்போதும், அந்தத் திரைப்படம் ரசிகர்களை பரவச நிலைக்கு கொண்டுச் செல்லும் தன்மையுடையாதகவே இருக்கிறது. அதென்ன படம்? அந்த படத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்? வாருங்கள் இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம். 

    உலகமே வியந்த பல திரைப்படங்களில் முக்கியமானது, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளிந்த அவதார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அவதார் திரைப்படத்தை பிரம்மித்தபடியே பார்த்தனர். அந்த பிரம்மிப்புக்குள்ளும் காதல், குடும்பம், ஆக்கிரமிப்பு என ஒரு பக்கா திரைப்படமாக அவதார் இருந்தது. 

    • இருவர் காதலிக்கிறார்கள், இறுதியில் சேர்கிறார்கள்; இருவர் காதலிக்கிறார்கள், இறுதியில் பிரிகிறார்கள். 
    • ஊரில் ஒரு நாயகன் உள்ளான், அதே ஊரில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் வில்லன் இருக்கிறான். நாயகன் வில்லனை அடித்து துவம்சம் செய்து காப்பாற்றுகிறார். 
    • ஒருவன் நூறு ஏக்கர் நிலம் வைத்துள்ளான். அந்த நூறு ஏக்கருக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த ஒரு ஏக்கர் நிலத்தை நூறு ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கைப்பற்ற முயல.. கைப்பற்றினானா? அந்த ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கைப்பற்ற விட்டானா? 
    • ஒரு நிலத்தில் வளங்கள் செழித்தோங்கி காணப்படுகின்றன எப்படியாவது அந்த நிலத்தை ஆக்கிரமித்து விட வேண்டும் என ஒரு கூட்டம், வளமுள்ள அந்த நிளத்தை தர மாட்டேன் என ஒரு கூட்டம் வென்றது யார்? 

    மேலே தெரிவித்துள்ள நான்கு அம்சங்களில் எதுவோ ஒன்று, உலக சினிமா வரலாற்றில் பல திரைப்படங்களின் அடிநாதமாக இருந்து விடுகிறது. இருப்பினும், நாம் அக்கதைகளை வெவ்வேறு திரைப்படங்களின் வாயிலாக கண்டுக்கொண்டே இருக்கிறோம். அதெப்படி? ஒரே கதையை சலிக்காமல் நாம் காண்கிறோம்? அங்குதான் விஷயமே இருக்கிறது. கதையின் அடித்தளம் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அந்த கதை பயணிக்கும் விதம், அந்த கதை நடைபெறும் களம், கதைமாந்தர்களின் குணங்கள் ஒரே கதையை நமக்கு பல்வேறு வகையில் காட்டுகிறது. 

    நாங்கள் தெரிவித்துள்ள நான்கு அம்சங்களில், நான்காவதாக உள்ளதுதான், அவதார் திரைப்படத்தின் அடிநாதம். அதாவது, சினிமாவில் பல காலமாக பேசப்பட்டு வரும் நில/வள அபகரிப்பை அடிப்படையாகக் கொண்டுதான் அவதார் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவதார் வெற்றி என்பது இன்றளவும் பிரம்மிப்பான ஒன்றேதான். காரணம், உலகின் மூலை முடுக்குகளிலும் சென்று சேரக்கூடிய கதையை, யாரும் எதிர்பாராத விதத்தில் வழங்கியதுதான் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் வெற்றிக்கு அடிப்படை. 

    திரைக்கதை, பிரம்மாண்டம் என பல்வேறு கோணங்களிலும் அவதார் திரைப்படம் கலக்கியது என்றால் அது மிகையாகாது. 

    1997-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம், டைட்டானிக். ஒரு பெரிய வெற்றிக்கு பிறகு உடனே அடுத்த திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்தால், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகே அவதார் திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் வெளியிடுகிறார். பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவதார் திரைப்படம் 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி வெளியானது. 

    12 ஆண்டு உழைப்புக்கு, காத்திருப்புக்கு பலனாக அவதார் இருந்தது. திரைப்படம் மக்களை ஆட்கொண்ட விதமும் சரி, வசூலும் சரி உலகெங்கும் உள்ள திரைத்துறையினரை வியக்க வைத்தது என்றே சொல்லலாம். இன்று வரை அவதாரின் வசூல் சாதனைகள் பேசப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. குறுகிய காலக்கட்டத்திலேயே அதிகளவில் வசூல் சாதனை புரிந்த திரைப்படமாக அவதார் உருவெடுத்தது. 

    உலகம் முழுவதும் அவதார் திரைப்படமானது, 2.92 பில்லியன் அளவில் வசூல் செய்து வியப்புக்குள்ளானது. அவதார் திருவிழா என்பது, ரிலீஸான அந்த சமயத்தில் மட்டுமில்லாது, அதன்பின்பும் கொண்டாடப்பட்டது. அவ்வபோது அவதார் திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. 

    அவதார் திரைப்படத்திற்கு பிறகு ஜேம்ஸ் கேமரூன் என்ன செய்யப்போகிறார்? என்ன படத்தை இயக்கவுள்ளார்? என்ற கேள்விகள் தொடர.. அவரோ மௌனம் சாதித்தார். காலங்கள் ஓட.. ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த திரைப்படம் குறித்த கேள்விகள் அதிகமாய் எழுந்தது, கூடவே அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விகளும் எழுந்தது. 

    அப்போதுதான், ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க உள்ளதாக அறிவித்தார். அதன்பின்பு, அவதார் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமானது. ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ என்ற தலைப்புடன் அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் பலத்த குஷிக்கு உள்ளாகினர். மேலும், ஆர்வத்துடன் அவதாரின் பண்டோரா உலகிற்கு மீண்டும் செல்ல ரசிகர்கள் ஆயுத்தமாகி வந்தனர். 

    மேலும், அவதார்- இரண்டாம் பாகத்தை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் மீண்டும் உலகெங்கும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரிலீஸில் அவதார் திரைப்படம் நான்கே நாட்களில் 350 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை நிகழ்த்தியது. 

    பொதுவாகவே, விருதுகள் வெல்லும் திரைப்படங்கள் வசூலில் சாதனை செய்யாது என நெடுங்காலமாக நிலவி வந்த கூற்றை சுக்குநூறாக உடைத்த பெருமை அவதாருக்கு உண்டு. மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘அவதார்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் பிரம்மிப்பில் இருந்தே இன்னும் மீளாத ரசிகர்கள், அவதார் இரண்டாம் பாகம் எப்படியிருக்கப் போகிறதென எண்ணி வியந்து வந்தனர், வருகின்றனர். 

    இந்நிலையில், பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது அவதார்- தி   வே ஆஃப் வாட்டர் திரைப்படமானது உலகம் முழுவதும் இன்று (டிசம்பர்-16) 52,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகாலை காட்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. பண்டோரா- உலகிற்கு தற்போது ரசிகர்கள் சென்று வியந்து வருகின்றனர். 

    அவதார் திரைப்படத்தின் இந்த பாகம் என்பது பலருக்கும் தற்போது ஒரு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உள்ளது. 2009-ஆம் ஆண்டு அவதார் வெளிவந்த போது பார்த்தவர்கள் தற்போது மீண்டும் தங்கள் பால்யத்துக்குள், தங்களின் கடந்த காலத்துக்குள் திரும்புவதைப் போல் அவதார்- ‘தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்திற்கு சென்று வருகின்றனர்.

    சரி. அவதார்- ‘தி வே ஆஃப் வாட்டர்’ இன்று ரிலீஸாகிவிட்டது. அவதார் திரைப்படங்களுக்கு அடுத்தடுத்த பாகங்கள் இருக்குமா என்றால்? அதற்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதில் அளித்துவிட்டார். அதன்படி, இந்தப் படம் மொத்தமாக நான்கு பாகங்கள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், மூன்றாம் பாகம் 2024 டிசம்பர் 20-ஆம் தேதியும் நான்காம் பாகம் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதியும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

    அவதார்- ‘தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தின் வெற்றியை பொறுத்தே அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் இருக்கும் என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது. 

    அவதார்- ‘தி வே ஆஃப் வாட்டர்’ வெறுமனே ஒரு திரைப்படமாக இல்லாமல், ஒரு பயணமாக இருக்குமென நம்புவோம்.. 

    “இனி நான் சூப்பர்மேனாக நடிக்க இயலாது” – விடைபெறும் ஹென்றி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....