Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநவம்பர் 11-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி: காரணம் இதுதான்..!

    நவம்பர் 11-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி: காரணம் இதுதான்..!

    பிரதமர் மோடி காந்தி கிராமியப் பலக்லைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவம்பர் 11 ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அப்போதைய மாத்திரை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாந்த் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை அளித்தார். 

    இதன் பிறகு, கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகளால் கடந்த 3 ஆண்டுகளாக காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 

    இந்நிலையில், இந்த ஆண்டு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காலத்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நாளை மறுநாள் தொடங்கும் வடகிழக்கு பருவமழை: படிப்படியாக அதிகரிக்கும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....