Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு1 ரன்னில் பாகிஸ்தானுக்கு வந்த சோதனை ! இருபது ஓவர் உலகக்கோப்பையில் அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே

    1 ரன்னில் பாகிஸ்தானுக்கு வந்த சோதனை ! இருபது ஓவர் உலகக்கோப்பையில் அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

    உலகக் கோப்பைத் தொடரில் நேற்றைய இரவு 7 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஜிம்பாப்வே அணி பேட் செய்தது. 

    ஜிம்பாப்வே அணி சார்பில் சீன் வில்லியம்ஸ் 31 ரன்கள் அடிக்க, வெஸ்லி மாதெவெரெ 17, கேப்டன் கிரெய்க் எர்வின் 19, ரையன் பர்ல் 10, பிராட் இவான்ஸ் 19 ரன்கள் சேர்த்தனர். இவர்களைத் தவிர இதர விக்கெட்டுகள் ஒருவரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. ஆதலால், ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் தரப்பில் முகமது வாஸிம் 4, ஷாதாப் கான் 3, ஹாரிஸ் ரௌஃப் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

    ஜிம்பாப்வே அணியை எளிதாக பாகிஸ்தான் அணி வீழ்த்திவிடும் என்று அனைவரும் நினைக்க ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியின் வரியைப்போல வெற்றிப்பெற்று எழுந்து நின்றது. ஆம், பாகிஸ்தானை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழக்கச் செய்து 129 ரன்களுக்கு அந்த அணி கட்டுப்படுத்தியது. ஒரு ரன்னில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிலும் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளில் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியது. ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் சிகந்தர் ராஸா ஆட்டநாயகன் ஆனார்.

    ஜிம்பாப்வேக்கு இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. மேலும், பாகிஸ்தான் அணி வெற்றி ஏதுமின்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

    இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் முடங்கியதற்கான காரணம் என்ன? மத்திய அமைச்சகம் எழுப்பிய கேள்வியால் பரபரப்பான மெட்டா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....