Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைநாளை மறுநாள் தொடங்கும் வடகிழக்கு பருவமழை: படிப்படியாக அதிகரிக்கும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

    நாளை மறுநாள் தொடங்கும் வடகிழக்கு பருவமழை: படிப்படியாக அதிகரிக்கும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

    தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால்,படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் ,பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால், வரும் நாட்களில் மழை பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறினார் .

    மேலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் நவம்பர் 4ம் தேதி வரை மழையானது படிப்படியாக அதிகரிக்கும். சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விட 45% அதிகமாக பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழையானது அக்டோபர் 23-ஆம் தேதியோடு முழுமையாக விலகியது என்று தெரிவித்துள்ளார் .

    அதேபோல் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பாய்ச்சல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....