Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'சூரிய சக்தியில் பம்ப்செட்' பிரதமர் மோடியையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயி!

    ‘சூரிய சக்தியில் பம்ப்செட்’ பிரதமர் மோடியையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயி!

    தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி குறித்து பிரதமர் மோடி வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியுள்ளார். 

    காஞ்சிபுர மாவட்டத்தை சேர்ந்தவர் எழிலன். இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு காஞ்சிபுரம் பகுதியிலேயே விவசாயம் செய்து வருகிறார். காஞ்சிபுரத்தில் விவசாயம் செய்து வரும் எழிலன் குறித்து நேற்று பிரதமர் மோடி பேசியுள்ளார். 

    நேற்று அகில இந்திய வானொலியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மத்திய அரசின் ‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டம்பற்றி உரையாற்றினார்.

    இதையும் படிங்க: நடிகர் விஜய்யுடன் இணைகிறாரா விஷால்..! வெளியான புதிய அறிவிப்பு..

    அப்போது, ‘பிரதம மந்திரி குசும் யோஜனா’ திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எழிலன், தனது வயலில் 10 குதிரை சக்தி திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்குகிற பம்ப்செட்டைப் பொருத்தி உள்ளார். இதனால், அவரது செலவுகள் குறைந்து வருமானம் அதிகரித்து வருகிறது’ என்று பிரதமர் மோடி பேசினார்.

    எழிலன் தொடக்கத்தில் தன்னுடைய நிலத்திற்கு டீசல் என்ஜின் மூலம் நீர் பாய்ச்சி வந்துள்ளார். இந்த டீசல் என்ஜின் மூலம் ஆழ்துளை கிணறுகளில் ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சி எடுக்க முடியவில்லை. மேலும், டீசல் என்ஜினுக்கு செலவு அதிகம் ஆனது.

    பின்னர், பிரதம மந்திரி குசும் யோஜனா திட்டத்தின்கீழ், அவரது நிலத்தில் 5 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் 10 குதிரை சக்தி திறன் கொண்ட மோட்டரை பொருத்தி தனது நிலத்துக்கு நீர் பாய்ச்ச தொடங்கியுள்ளார். இதனால் இவருக்கு மின்சாரம் மற்றும் டீசல் செலவு இல்லாமல், லாபம் பெருகியுள்ளதாக எழிலன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது பெயரை ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறதென எழிலன் கூறினார். 

    இதையும் படிங்க: மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் ஆரம்பம்? ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள்! உளவுத்துறை எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....