Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி? வெளியான அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்

    குஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி? வெளியான அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்

    மோர்பி தொங்கு பால விபத்து குறித்து விசாரணை செய்ய குஜராத் அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் -30) மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். 

    இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 140-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    மேலும், 50 பேருக்கும் அதிகமானோர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ‘சூரிய சக்தியில் பம்ப்செட்’ பிரதமர் மோடியையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயி!

    மோர்பி பாலம் குறித்த பார்வை:

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமானது சுற்றுலாவிற்கு வரும் முக்கிய இடமாக திகழ்கிறது. 

    அந்த பாலத்தில் கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. சுமார் இதற்காக 2 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஜிண்டால் நிறுவனம் இந்த தொங்கு பாலத்தை புதுப்பிக்க தேவையான முதன்மைப் பொருள்களைத் தயாரித்தது. அதாவது, ஒரு இலகுரக அலுமினியத் தாளை தயாரித்தது. இதைத்தொடர்ந்து, மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு அதாவது, அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.

    ஆனால், பாலத்தின் திறப்பிற்கு முன்பு, இப்பாலமானது பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக உள்ளதா? வலிமையுள்ளதா? போன்ற சோதனைகளை மேற்கொள்ளாமலேயே, தகுதிச் சான்றிதழை பெறாமலேயே இந்தப் பாலமானது திறக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பாலத்தின் திறன்படி ஒரே நேரத்தில் 100 பேர் செல்லலாம்.ஆனால், விபத்து நடைபெற்ற போது சுமார் 400 பேருக்கும் அதிகமானோர் பாலத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றப்பட்டதன் காரணமாகவே மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டு வருகிறது. இதுவரையில், தகுதிச் சான்றிதழ் பெறாததும், அதிகளவிலான மக்களை பாலத்திற்குள் அனுமதித்ததும்தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது. 

    ஓரேவா நிறுவனம்  – அஜந்தா கடிகாரங்கள் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் இந்நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு பாலத்தை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துகொண்டதாக தெரிகிறது. 

    ஓரேவா நிறுவனம் தான் மோர்பி பாலம் சீரமைப்பு பணிகளை முழுமையாக மேற்கொண்டது. எனவே இந்நிறுவனம் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஓரேவா நிறுவனம் அஜந்தா கடிகாரங்கள், எலக்ட்ரிக் பைக் உள்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டாலும், பாலம் பராமரிப்பதில் இதற்கு முன் இந்த நிறுவனத்துக்கு பெரிய அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், மோர்பி தொங்கு பால விபத்து குறித்து விசாரணை செய்ய குஜராத் அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் விசாரணை செய்து இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்! சென்னையிலும் கொட்டும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....