Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச்சூடு- மூன்று பேர் பலி

    பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச்சூடு- மூன்று பேர் பலி

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது திடீரென நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா பகுதியிலுள்ள அடேனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

    இச்சம்பவத்தில் லாமிடான் நகர முன்னாள் மேயர் ரோசிடா ஃபுரிகே, அவரது உதவியாளர் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், லாமிடான் நகர முன்னாள் மேயர் ரோசிடா ஃபுரிகே தனது மகள் பட்டம் பெறுவதைக் காண்பதற்காக அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தபோதுதான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து, ரோசிடா ஃபுரிகேவைக் குறிவைத்தே இந்தச் சம்பவம் நிகழ்ந்தாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது காவலில் உள்ள அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கி உரிமம் வேண்டும்- நடிகர் சல்மான்கான் கோரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....