Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுநீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம்

    நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம்

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கியது. இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். 

    இந்நிலையில்,  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இவர் தகுதி சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். இதன்பிறகு கடந்த ஜூலை 24-ம் தேதி ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது. 

    இந்த இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தனக்கான முதல் வாய்ப்பில் ‛ஃபவுல்’ செய்தார். இதையடுத்து 2-வது வாய்ப்பில் 82.39 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 3-வது வாய்ப்பில் 86.37 மீட்டர் தொலைவுக்கும் ஈட்டியை வீசினார். இதன்மூலம் அவருக்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். இதையடுத்து நீரஜ் சோப்ரா தனது 4-வது வாய்ப்பில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசி 2-வது இடம் பிடித்தார். 5-வது மற்றும் 6-வது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா ‛ஃபவுல்’ செய்தார்.

    இதைத் தொடர்ந்து, தனது 4-வது வாய்ப்பில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசியதால் நீரஜ் சோப்ரா 2-வது இடத்திலேயே நீடித்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

    மேலும்,  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பிறகு பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

    முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 32-வது ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில்  தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    துப்பாக்கி உரிமம் வேண்டும்- நடிகர் சல்மான்கான் கோரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....