Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அமரர் உத்திரவேலு பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை மனு...

    அமரர் உத்திரவேலு பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை மனு…

    முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான அமரர் உத்திரவேலு பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக முன்னெடுக்க அரசாணை வெளியிட கோரி புதுச்சேரி சமூகநல இயக்கங்களின் சார்பாக புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

    பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் புதுச்சேரி அரசு மறைந்த தியாகிகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசு சார்பில் சிலை அமைத்து அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக முன்னெடுத்து கௌரவப்படுத்தி வருகிறது.

    அந்த வரிசையில் பாகூர் சட்டமன்ற தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவருமான அமரர் உத்திரவேலு அவர்களுக்கு தங்கள் முயற்சியால் அரசு பொதுமருத்துவமனை அருகில் உள்ள பூங்காவில் சிலை அமைக்கப்பட்டது. ஆனால், அரசு சார்பில் முறையாக திறப்புவிழா செய்வதற்கு முன்பாக சிலர் தான் தோன்றித்தனமாக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் உத்திரவேலு சிலையை திறந்து அவருக்கான மரியாதையை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

    உத்திரவேலு மூன்றுமுறை பாகூர் சட்டமன்றத் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களுக்கும் போராடக்கூடிய எதிர்கட்சித் தலைவராக திகழ்ந்தவர். இவரின் சிலை அரசால் அங்கீகரிக்கப்படாமல் அவமதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. சிலர் அறியாமல் செய்த தவறால் புதுச்சேரிக்கு பெருமைமிக்க மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் உத்திரவேலு புகழுக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளதை தங்கள் ஆட்சியிலேயே சரிசெய்ய வேண்டுமென்று பொதுநல அமைப்புகள் எண்ணுகின்றோம்.

    வருகின்ற 21.12.2022-அன்று அமரர் உத்திரவேலு அவர்களின் நினைவு நாளை அரசு சார்பில் கடைபிடித்திட உரிய அரசாணை வெளியிட்டு அன்னாரது சிலையை முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைத்து அரசு மரியாதை வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், இனி வரும் காலங்களில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென புதுச்சே சமூகநல அமைப்புகள் சார்பாக வலியறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது.

    அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; டிடிவி தினகரன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....