Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; டிடிவி தினகரன்

    அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; டிடிவி தினகரன்

    அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சிறுபான்மையினர் நலப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் அழைப்பிதழ் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து மத்திய அரசிடமும், ஓ.பன்னீர் செல்வத்திடம் தான் கேட்க வேண்டும். தான் அமமுக பொதுச் செயலாளர், இன்னொரு கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன். அதிமுகவில் உள்ளவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர்.

    அசுர பலத்தில் உள்ள திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணிக்கு செல்வது காலத்தின் கட்டாயம் என்றால் அதை தவிர்க்க முடியாது. கூட்டணிக்கு யார் தலைமை என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதலில் நிதானமாக உள்ளாரா என்பதனை பரிசோதிக்க வேண்டும்.

    அமமுகவில் காலியாக உள்ள தலைவர் பதவிகளை அடுத்த ஆண்டு கட்சி ரீதியான தேர்தல் வைக்கப்பட்டு, அதன் மூலம் அந்த இடம் நிரப்பப்படும்” என கூறினார்.

    பழந்தமிழர்கள் கொண்டாடிய கார்த்திகை தீபம்; மாவளியும் சொக்கப்பனையும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....