Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கொரோனா ஓய்ந்தது ; வெள்ளம் வந்தது - தொடர் இன்னல்களில் மக்கள்!

    கொரோனா ஓய்ந்தது ; வெள்ளம் வந்தது – தொடர் இன்னல்களில் மக்கள்!

    உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா, இப்போது தான் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளது. அதற்குள், அடுத்த ஆபத்து கனமழையின் உருவத்தில் சீனாவிற்கு வந்துள்ளது. மழைக்காலம் தொடங்கி, கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழைக்கு 12 பேர் பலியாகி இருப்பது, சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சீன நாட்டின் தெற்கு திசையில் அமைந்துள்ள பல மாகாணங்களில், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 6 மாகாணங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த மாகாணங்களில் உள்ள மக்கள் மிகுந்த சிரம்த்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, ஹெனான் மாகாணத்தில் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஜெங்சோவில், கடந்த வாரம் சனிக்கிழமை இரவு 8 மணி முதல், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரையில் 61.71 செ.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலமாக, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், சீனாவில் அதிக அளவு மழை பெய்துள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில், மழை இன்னமும் சில நாட்களுக்கு தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கனமழையின் காரணமாக தெற்கு சீனாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகள் முழுவதும் நிரம்பி, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊர்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததுள்ளதால் மிகுந்த சிரமத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சீனாவில் கரை புரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் மற்றும் இரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து ஹெனான் உள்பட பல மாகாணங்களில், பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளன. இதற்கிடையே, வரலாறு காணாத கனமழைக்கு இதுவரையில், 12 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 1.77 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கனமழை மற்றும் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் மீட்பு குழுவினரால், முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தென் சீன பகுதிகளில் இன்னமும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீன அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

    அதிமுக பொதுக்குழு: நேரடி செய்திகள்.. ஒரே மேடையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....