Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை சர்வதேச விமான நிலையத்தில் வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையில் வேறுபாடு!

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையில் வேறுபாடு!

    கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

    தினமும் 33 முதல் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின்னர் பயணிகள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில நாட்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

    கோவை விமான நிலையம் தற்போது தனது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. கோவைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில், 6 புதிய விமான போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. கோவைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை, கடந்த ஜனவரி வரை 22 ஆக இருந்தது. படிப்படியாக தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.

    கோவையிலிருந்து ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவுக்கும், ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், கோவையிலிருந்து சிங்கப்பூருக்கும் செல்கிறது. இவை இரண்டு மட்டுமே, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களாக உள்ளன. சர்வதேச விமான நிலையமாக இருந்தபோதிலும், வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் குறைவாகவே உள்ளது.

    விமான நிலைய விரிவாக்கத்திற்கு பின்னர், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு விமான போக்குவரத்தும், வணிகமும் உயரும் என தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கோவையிலிருந்து தற்போது, மும்பை, பெங்களூரு, டில்லி, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு எளிதாக சென்றுவரும் வகையில், விமான சேவைகள் அதிகரித்துள்ளன. கோவையிலிருந்து அதிக விமான சேவைகளை, இண்டிகோ நிறுவனம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    அதிமுக பொதுச் செயலாளர் ஆவாரா எடப்பாடி பழனிச்சாமி? ஓபிஎஸ் தெரிவித்த கண்டனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....