Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 தொடருக்கான இந்திய அணியிலும் கே.எல் ராகுல் இல்லை; அப்போ இங்கிலாந்து தொடரில்?

    டி20 தொடருக்கான இந்திய அணியிலும் கே.எல் ராகுல் இல்லை; அப்போ இங்கிலாந்து தொடரில்?

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும், மூன்றாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.

    முதலில், இத்தொடருக்கு கே.எல். ராகுல் தான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், இடுப்புப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் தொடரிலிருந்து முழுமையாக விலகினார். இதனையடுத்து, இந்திய அணியை முதல் முறையாக வழிநடத்தும் பொறுப்பு ரிஷப் பந்த்துக்கு வழங்கப்பட்டது.

    தென்னாப்ரிக்காவின் தொடரில் இருந்து விலகிய கே.எல். ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்த பிறகு, அயர்லாந்து செல்கிறது இந்திய அணி. அயர்லாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதலாவது டி20 போட்டி ஜூன் 26 ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தொடருக்கு, அணிக்கு ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அயர்லாந்து தொடர் முடிந்ததும், இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடவுள்ளது. கடந்த ஆண்டு நடக்கவிருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, பர்மிங்காமில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணி முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல். ராகுலும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், கே.எல். ராகுலுக்கு இடுப்பு பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை.

    மேலும், இந்தக் காயம் குணமாக அதிக நாட்களாகும் என்பதால், அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆன்ட்ராய்டு டூ ஐபோன்: வாட்சப் தரவுகளை மாற்றுவது எப்படி??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....