Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமழைக்கால கூட்டத்தொடர்: 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    மழைக்கால கூட்டத்தொடர்: 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 28) 3 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதியில் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 9வது நாளான இன்று, எதிர்கட்சிகளை சேர்ந்த 3 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியை ஏற்படுத்தியதற்காக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுஷில் கேஆர் குப்தா, சந்தீப் கேஆர் பதக் மற்றும் சுயேச்சை மாநிலங்களவை உறுப்பினர் அஜித் குமார் புயான் ஆகியோர் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. 

    முன்னதாக, ஜூலை 25ம் தேதி தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும், ஜூலை 26ம் தேதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட மாநிலங்களவையைச் சேர்ந்த 19 உறுப்பினர்களும், ஜூலை 27ம் தேதி மாநிலங்களவை உறுப்பினரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இன்று (ஜூலை 28) காலை மாநிலங்களவையில் மையப்பகுதிக்கு சென்று, அவைத் தலைவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பதாகைகள் ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பிய 3 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விதி எண் 256ன் கீழ் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி தொடங்கியதில் இருந்து, ஜிஎஸ்டி வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை குறித்து விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு கோஷங்களை முழக்கமிட்டும், பதாகைகளை ஏந்தியும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    மழைக்கால கூட்டத்தொடர்: 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....