Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

    ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஆடிப்பூரத் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் கோயில் வளாகத்தில் மட்டுமே  நடைபெற்றது. 

    இத்திருவிழாவின் தொடக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) கொடியேற்றம் நடைபெற்றது. அன்று, அதிகாலை ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. 

    இத்திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் ஆண்டாள் ரெங்க மன்னார் சிறப்பு அலங்காரங்களில் காட்சியளிக்கிறார். அந்தவகையில் 5-ம் நாளான வியாழக்கிழமை (ஜூலை 28) கருட சேவையும், 7-ம் நாளான சனிக்கிழமை (ஜூலை 30) சயன சேவையும், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆகஸ்ட் 1-ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. 

    ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்- கல்வியின் தரத்தை முன்னேற்றுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....