Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி மீது பதவி நீக்க தீர்மானம்

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி மீது பதவி நீக்க தீர்மானம்

    பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி மீது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு கவிழும் நிலை உருவானது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி சபாநாயகர் நிராகரித்தார்.

    இதை எதிர்த்து, எதிர்கட்சிகள் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தை அனுகியது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தத்து. அந்த உத்தரவின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு கவிழ்க்கப்பட்டது. 

    இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இந்நிலையில், இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த 14-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது.

    அத்தீர்ப்பின்படி, இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததில் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, இம்ரான்கான் மற்றும் அன்றைய ஆளும் கட்சி தலைவர்கள் அதிகாரத்தை மீறியதாக கருத்து தெரிவித்திருந்தது.

    அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அரசியல் சாசனம் பிரிவு 6-ன்கீழ், ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, இம்ரான்கான், முன்னாள் சபாநாயகர் ஆசாத் கைசர், முன்னாள் துணை சபாநாயகர் காசிம் சூரி, முன்னாள் சட்ட மந்திரி பவாத் சவுத்ரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

    இந்நிலையில், பாகிஸ்தானின் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்னனுல்லா கான், நாடாளுமன்ற செனட் சபையில் அதிபர் ஆரிப் ஆல்வி மீது பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

    இந்த தீர்மானத்தில் அதிபர் ஆரிப் ஆல்வி, முன்னாள் பிரதமர் இம்ரான்கான், முன்னாள் சட்ட மந்திரி பவாத் சவுத்ரி, காசிம் சூரி ஆகியோர் மீது அரசியல் சாசன சட்டம் பிரிவு 6-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கை: எரிபொருளுக்காக இரண்டு நாள்கள் காத்திருந்த கிரிக்கெட் வீரர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....