Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை: எரிபொருளுக்காக இரண்டு நாள்கள் காத்திருந்த கிரிக்கெட் வீரர்

    இலங்கை: எரிபொருளுக்காக இரண்டு நாள்கள் காத்திருந்த கிரிக்கெட் வீரர்

    இலங்கையில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் இரண்டு நாள்கள் காத்திருந்ததாக  அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே கூறியுள்ளார். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கே மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இப்போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். 

    இருப்பினும், இலங்கையில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும்,  அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் பெரும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சமிகா கருணாரத்னே எரிபொருள் பற்றாக்குறையால் அவர் அவதிப்பட்டதை கூறியுள்ளார். 

    சமிகா கருணாரத்னே கூறியதாவது:

    எரிபொருள் பற்றாக்குறையால், என்னால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட போக முடியவில்லை. 2 நாள்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காரில், நீண்ட வரிசையில் காத்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக எரிபொருள் கிடைத்து விட்டது.

    நான் கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எரிபொருள் பற்றாக்குறையால் என்னால் சென்று பயிற்சி செய்ய முடியவில்லை. 2 நாள்களுக்கு பின்பு ரூ.10 ஆயிரத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளேன். இது 2ல் இருந்து 3 நாள்களுக்கு வரும்.

    இவ்வாறு சமிகா கருணாரத்னே கூறியுள்ளார். 

    இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிய கோப்பையை இலங்கை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....