Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

    முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

    இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது

    நேற்று முன்தினம் (ஜூலை 14) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியது. இந்நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியாகவும் நீர் இருப்பு 90.92 டிஎம்சியாகவும் இருந்தது. 

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 1.18 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

    இதனிடையே, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குஜராத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....