Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்) மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும்  தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 17 செ.மீ. மழையும் மேல் பவானியில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதுடன் மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளது.

    உலகை மிரட்டும் குரங்கம்மை நோய்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....