Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉலகை மிரட்டும் குரங்கம்மை நோய்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    உலகை மிரட்டும் குரங்கம்மை நோய்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி அச்சத்தை அதிகரித்து வரும் நிலையில்,குரங்கம்மை நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் மூலம் வெளியிட்டுள்ளது.

    கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.

    தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போன்ற ஒரு சுகாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

    இதுவரை குரங்கம்மையால் உயிரிழப்பு எதுவும் இல்லை. ஆனால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், குரங்கம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பன்னாட்டு பயணிகளை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும்.

    மேலும் குரங்கம்மை நோய் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு, தொடர் காய்ச்சல், உடல்வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களிலும், சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும்.

    அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து 7 முதல் 21 நாள்கள் வரை தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்த வேண்டும்.

    மேலும் கடந்த 21 நாள்களில் இந்த நாடுகளில் இருந்து வந்த பயணிகளையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குரங்கம்மை அறிகுறி தென்பட்டால் இணை நோய் உள்ளவர்கள் உடனே சிகிச்சை பெற வேண்டும். குரங்கம்மை சிகிச்சைக்கு தேவையான சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி தென்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருந்த நிலையில், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....