Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானில் கடும் பஞ்சம்; வீரர்களுக்கே உணவில்லையென கடிதம்..

    பாகிஸ்தானில் கடும் பஞ்சம்; வீரர்களுக்கே உணவில்லையென கடிதம்..

    பாகிஸ்தான் ராணுவ உணவகங்களிலும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு பாகிஸ்தான் அரசு உள்ளாகியுள்ளது. அடிப்படை பொருட்களுக்கே மக்கள் திண்டாடும் நிலை பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. 

    இந்த பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியாக எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ உணவகங்களிலும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நெருக்கடி காரணமாக வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட முறையாக வழங்க முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து பீல்டு கமாண்டர்கள் குவார்ட்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்தியாவில் இவ்வளவு வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கமா? – வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....