Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் இவ்வளவு வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

    இந்தியாவில் இவ்வளவு வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கமா? – வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

    இந்தியாவில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    வாட்சப் செயலியின் தமிழாக்கம் புலனம் அல்லது பகிரி எனப்படுகிறது. இந்த பகிரி செயலியை உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் உபயோகித்து வருகின்றனர். கேளிக்கையில் ஆரம்பித்து முக்கியமான விடயங்கள் வரை பகிரவும், உரையாடவும் பகிரி செயலியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயலி இல்லையென்றால் அடிப்படை முதல் ஆடம்பரம் வரை அனைத்து வகையான அன்றாடங்களிலும் குறுக்கீடுகள் நேரும் என்ற அளவுக்கு பகிரி செயலியின் தேவை உள்ளது.

    இந்நிலையில், நடப்பாண்டில் ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் பயனாளர்களிடமிருந்து எவ்வித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளங்கள் மாதந்தோறும் தங்கள் பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதனின் ஒரு பகுதியாகவே இந்த வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ‘என் அன்பு மிஷ்கின் சார்,,,’ – லோகேஷ் கனகராஜ் சொன்ன செய்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....