Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இடைத்தேர்தல் பாஜகவுக்கானது இல்லை; அண்ணாமலை பேச்சு

    இடைத்தேர்தல் பாஜகவுக்கானது இல்லை; அண்ணாமலை பேச்சு

    ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பைப் ஏற்போம் என்றும் மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாகவும் தெரிவித்தார். மேலும் அண்ணாமலை, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். 

    தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்தது என்வும் திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்களித்து இருக்கின்றனர் என்பதை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். 

    2024 ஆம் ஆண்டு தேர்தலே பாஜகவுக்கான தேர்தல்; இடைத்தேர்தல் பாஜக-வுக்கானது இல்லை. பிரதமர் நரேந்திர மோடியை ஏற்பவர்களுடன் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். 

    ‘என் அன்பு மிஷ்கின் சார்,,,’ – லோகேஷ் கனகராஜ் சொன்ன செய்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....